
புதுடில்லி, நவ 20 – கலிபோர்னியாவைச் சேர்ந்த பராமரிப்பாளர் ஒருவன் தனது கண்காணிப்பில் இருந்த வயதுக்குறைந்த 16 பையன்களை மானபங்கம் செய்த குற்றத்திற்காக 707 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 14 வயதுக்குட்பட்ட வயது குறைந்தவருடன் மோசமான மற்றும் காமச் செயல்கள் உட்பட 34 குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 34 வயதுடைய மத்தேயு ஜாக்ரெஸ்கி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டான் . தனது பராமரிப்பில் விடப்பட்ட 16 சிறுவர்களைத் துன்புறுத்தியது மற்றும் 17 வது நபரிடம் ஆபாசப் படங்களைக் காட்டிய குற்றத்திற்காக மத்தேயுவுக்கு ஆரஞ்சு கவுண்டி (Orange County) மாவட்ட நீதிபதி 707 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.
கடந்த 2014 ஆண்டு ஜனவரி மற்றும் 2019ஆம் ஆண்டு மே மாதத்திற்கிடையே மத்தேயு இந்த கொடூரமான குற்றங்களைச் செய்துள்ளான். அவனது பாலியல் நடவடிக்கையால் 2 முதல் 12 வயதுடையவர்களும் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தின் குற்றப் பதிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரால் அரக்கன் என்று அழைக்கப்படும் மத்தேயு, தம்மால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிள்ளைகளுக்கு புன்னகையை வரவழைப்பதில் தமக்கு பெருமை கிடைத்துள்ளதாக கூறிக்கொண்டான்