
ஜொகூர், லயாங்-லயாங்கில், 15 வயது யுவதியை கற்பழிந்த 18 வயது இளைஞன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டான்.
கடந்த புதன்கிழமை, பின்னிரவு மணி 1.30 வாக்கில், கழிவறைக்கு சென்ற மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்த அவரது 56 வயது தாயாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு மகள் குறை மாத கரு ஒன்றை பிரசவித்து இருந்ததே அதற்கு காரணம்.
இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட மகளை உடனடியாக, சுல்தானா அமினா மதுத்துவமனையில் சேர்ந்த அந்த தாய், அதிகாலை மணி 5.59 வாக்கில் அச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் செய்தார்.
அந்த புகாரை அடுத்து, அந்த யுவதியை கற்பழித்தாக நம்பப்படும் ஆடவன், அதே நாள் மாலை மணி ஆறு வாக்கில் கைதுச் செய்யப்பட்டதை, குலாய் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் தோக் பெங் இயோ உறுதிப்படுத்தினார்.