
கோலாலம்பூர், மே 9 – இன்று நடைபெறவிருந்த நஜீப் ரசாக்கிற்கு எதிரான 1எம்.டி.பி குற்றவியல் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. வயிற்று வலியினால் நீண்ட நேரம் அமர்ந்திருக்கவோ அல்லது நிற்கவோ முடியாததால் நஜீப் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் அவருக்கு இன்றும் நாளையும் கோலாலம்பூர் மருத்துவமனை மருத்துவ விடுப்பு வழங்கியுள்ளதாக காஜாங் சிறைச்சாலையின் மருத்துவ அதிகாரி டாக்டர் Haffiz Hoshni தெரிவித்தார். நேற்று இரவு முதல் வயிற்று போக்கினால் நஜீப் அவதிப்பட்டதைத் தொடர்ந்து அவர் கோலாலம்பூர் மருத்துமனைக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.