Latestமலேசியா

வரம்பு மீறிய பேச்சுகளுக்கு புனித மாதத்தில் பிரதமரிடம் மன்னிப்புக் கோரிய கெடா மந்திரி பெசார்

ஜித்ரா, மே-5, ஜித்ராவில் சனிக்கிழமை நடைபெற்ற மடானி நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னிலையில் கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ Muhammad Sanusi Md Nor மனதார மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

கெடா மந்திரி பெசார் என்ற வகையிலும் அரசியல் ரீதியாகவும் இதுநாள் வரை தாம் எதுவும் தவறாகவே வரம்பு மீறியோ பேசியிருந்தால், இந்த புனித ஷவ்வால் மாதத்தைப் பயன்படுத்தி மன்னிப்புக் கோருவதாக Sanusi பகிரங்கமாக அறிவித்தார்.

தவறு செய்வதும் வரம்பு மீறுவதும் மனித இயல்பு என்பதால், தாமும் அதில் விதி விலக்கல்ல என்றார் அவர்.

ஒருவருக்கொருவர் மனதார மன்னிப்பு பாராட்டி, பொறுப்போடு இனி புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்குவோம் என Sanusi தமதுரையில் பேசினார்.

பொது மக்களின் நலன் என வரும் போது அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட Sanusi, மத்திய அரசாங்கமும் கெடா மாநிலத்தைப் புறக்கணிக்காது என நம்பிக்கைத் தெரிவித்தார்.

கெடாவில் குறிப்பாக புறநகர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமைக் கொடுத்து வருவதற்கும் Sanusi நன்றித் தெரிவித்துக் கொண்டார்.

இந்த மடானி நோன்புப் பெருநாள் உபசரிப்பு நிகழ்வில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், பொது மக்கள் என 15,000 பேருக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனலின் பிரச்சார பீரங்கியாக வர்ணிக்கப்படும் Sanusi, மத்தியில் அன்வார் தலைமையில் ஒற்றுமை அரசாங்கம் பொறுப்பேற்றதில் இருந்தே, தமது அனல் பறக்கும் பேச்சுகளாலும் நடவடிக்கைகளாலும் அதற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் Sanusi என்பது நாடறிந்த விஷயமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!