Latest
வருங்கால “மனைவி” உண்மையில் ஒரு ஆணா? ; திருமண ஆசையை உடனடியாக கைவிட்ட மணமகன்

ஜகார்த்தா, செப்டம்பர் 14 – லோம்போக்கை சேர்ந்த, இளைஞர் ஒருவர், தாம் திருமணம் செய்துக் கொள்ளவிருந்த வருங்கால “மனைவி”, உண்மையில் பெண் குணங்களைக் கொண்ட ஓர் ஆண் என்பதை அறிந்து கொண்டதை அடுத்து, உடனடியாக திருமணத்தை இரத்துச் செய்துள்ளார்.
அச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளதோடு, அந்த இளைஞரின் ஊர் தலைவரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
“கிட்டதட்ட ஒரு ஆணை அந்த இளைஞர் கரம்பிடிக்க இருந்தார்” என கிராம தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மாப்பிள்ளை வீட்டார், வருங்கால “மருமகளை” பரிசம் போட, அவரது வீட்டிற்கு சென்ற போது, அந்த உண்மையை அறிந்து கொண்டனர்.
தங்களுக்குப் பெண் பிள்ளை யாரும் இல்லை என, சம்பந்தப்பட்ட குடும்பத்தார் கூறவே உண்மை வெளிச்சத்துக்கு வந்ததோடு, மணமகன் தனது திருமண ஆசையையும் கைவிட்டதாக கூறப்படுகிறது.