Latestமலேசியா

வருமான வரி – போலீஸ் அதிகாரிகள் என கூறி வர்த்தகரிடம் Rm 45,400 மோசடி

குவந்தான், பிப் 9 – தங்களை வருமான வரித்துறையின் மற்றும் போலீஸ் அதிகாரி எனக் கூறிய இருவர் வர்த்தகர் ஒருவரிடம் 45,400 ரிங்கிட் மோசடி செய்துள்ளர். இணைய மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர் என நம்பப்படும் அந்த ஆடவர்களிடம் 32 வயதுடைய வர்த்தகர் தமது வங்கியிலிருந்த 45,400 ரிங்கிட் சேமிப்பு தொகையை இழந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட வர்த்தகர் புகார் செய்துள்ளதாக என பகாங் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் தலைவர் Superintendan Mohd wazir Mohd Yusof தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை 1,30 மணியளவில் அந்த வர்த்தகரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஒருவர், நிறுவன வரி பாக்கியாக 54, 978 ரிங்கிட் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். தமக்கு எந்த பாக்கியும் இல்லையென்று அந்த வர்த்தகர் கூறியுள்ளார். அதன்பிறகு வங்கிக் கணக்கு உட்பட சுய விவரங்களை வழங்கும் பேங்க் நெகாரா மலேசியாவின் சுய விவர பார செயலியை பூர்த்தி செய்து அனுப்பும்படி கோரியிருக்கின்றனர். செவ்வாய்க்கிழமையன்று அந்த வர்த்தகர் தமது வங்கிக் கணக்கை பரிசோதித்தபோது அதிலிருந்த 45,400 ரிங்கிட்டை மாயமாகிபோனதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் செய்துள்ளார் என Superintendan Mohd wazir தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!