Latestமலேசியா

சிலாங்கூரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரி.ம 14.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்

காஜாங், மார்ச் 21 – சிலாங்கூரில் பல இடங்களில் போலீஸ் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 14.5மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் கமிஷனர் டத்தோ Khawk Kok Chin தெரிவித்தார். இந்த நடவடிக்கையின்போது 33 மற்றும் 44 வயதுடைய இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு ஒரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அந்த இருவரும் போதைப் பொருளை பிற இடங்களுக்கு கொண்டு செல்வது மற்றும் அவற்றை கிடங்கில் பாதுகாப்பாக வைப்பதில் சம்பந்தப்பட்டிருந்தனர். இதற்காக ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு 2,000 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட்வரை பணம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

அவர்களிடமிருந்து 332. 4443கிலோ ஷாபு உட்பட பல்வேறு போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக காஜாங் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Khawk Kok Chin தெரிவித்தனர். அந்த போதைப் பொருட்களின் கிடங்காக ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கும்பல் உள்நாட்டு சந்தை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் போதைப் பொருளை அனுப்பிவந்துள்னர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை 18 லட்சம் பேருக்கு விநியோகிக்க முடியும் என கமிஷனர் Khawk koK Chin கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!