
ஜோகூர் பாரு, மார்ச் 16 – Puteri Harbour ரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பபப்படும் இரு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர். இணையம் வாயிலாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகரிடம் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வைரலாகி வருவதை தாங்கள் கண்டறிந்துள்ளதாகவும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விட்டதாக Iskandar Puteri மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Rahmat Ariffin தெரிவித்தார். அந்த சந்தேகப்பேர்வழிகளும் ஒரு காரை மோதியபின் அதிலிருந்தவ கரை பாராங் கத்தியினால் காயப்படுத்தி அவரிடமிருந்து 10,000 ரிங்கிட்டை அபகரித்துச் சென்றதாக Rahmat Ariffin கூறினார். இந்த கொள்ளைச் சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.