
டாக்கா , மார்ச் 8 – வங்காளதேச தலைநகர் டாக்காவில் பரபரப்புமிக்க வர்த்தக கட்டிடம் ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் மாண்டதோடு 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் டாக்கா மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த மருத்துவமனையின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் Mohamad Nazmul தெரிவித்தார். அந்த குண்டு வெடிப்பினால் ஏழு மற்றும் ஐந்து மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் பெருத்த சேதத்திற்கு உள்ளாகின. உள்ளூர் நேரப்படி மாலை மணி 4.40 அளவில் ஏற்பட்ட அந்த வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை.