
ஈப்போ , செப் 23 – வர்த்தக துறையில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகரிக்கவேண்டும் என ம.இ.கா கல்விக் குழுவின் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கேட்டுக்கொண்டார். கடந்த காலங்களை விட வர்த்தக துறையில் இந்தியர்கள் ஈடுபாடு காட்டினாலும் பல துறைகளில் அவர்கள் தங்களது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இன்று இந்திய ஆண்களை விட வர்த்த துறையில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வருவதை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.மகளிர்கள் தங்களின் வர்த்தத்தைரிவாக்கம் செய்ய கடனுதவி திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தி வருகிறது.குறிப்பாக மகளிர் மேம்பாடு துறை இலாகாக்களுடன் தொடர்புக் கொண்டும் மற்றும் தெக்குன் கடனுதவி திட்டங்கள் முலம் பயன் அடையலாம் என்று அறிவுறுத்தினார்.
பேராக் தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் வரோனி வென்ச்சர் & ஆர்என் ஸ்டைலிஷ் நெயில் ஆர்ட் நிறுவனத்தின் ஆதரவோடு பேரா, ஈப்போவில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற தொழில் முனைவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோது டத்தோ நெல்சன் இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பேரா ம.இ.கா. தலைவர் டத்தோ வ. இளங்கோ சிறப்பு வருகை புரிந்தார். இந்த நிகழ்வில் சுமார் 30 க்கும் மேற்பட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றது மகிழ்சியை அளிப்பதாக டத்தோ இளங்கோ தெரிவித்தார். வர்த்த துறையில் இந்தியர்கள் தொடர்ந்து வளர்ச்சிக்கானவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னதாக பேசித் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சைமன் ஜூட் , தொழில் துறையில் இந்தியர்கள் தொடர்ந்து மேம்பாடு கான ஊக்குவிக்க இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக குறிப்பிட்டார். இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற ஆதரவு அளித்த அனைவருக்கும் இணை ஏற்பாட்டாளர்களான
நிர்மலா தேவி முனியாண்டி மற்றும் ரோகினி கோபாலன் ஆகிய இருவரும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்