
ஹங் காங், மார்ச் 17 – விமானத்தின் வர்த்தக வகுப்பில் , நாய் ஒன்று ஹங்காங்கிலிருந்து இஸ்தான்பூலுக்கு சொகுசாக பயணம் செய்த புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைத்தளவாசிகள் பலரை பெரிதும் ஆச்சரியப்பட வைத்திருக்கின்றது.
நான்கு வயது Fifi என்றழைக்கப்படும் அந்த நாய் , தலையணை மீது தலையை வைத்து கொண்டு போர்வைக்குள் தூங்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டிருக்கின்றன.
11 மணி நேர விமான பயணத்தின் போது Fifi மிக நிதானமுடன் காணப்பட்டதாக அதன் உரிமையாளரான பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஹெலன் ரோசாலி (Helen Rosalie) குறிப்பிட்டிருக்கின்றார்.
Fifi தனது ஆடம்பரமான பயணத்தின் போது வசதியாக தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் , தனது மகளைப் போல அந்த நாயை கவனித்துக் கொண்ட அதன் உரிமையாளரின் செயலை சமூக வலைத்தளவாசிகள் சிலர் குறைகூறவும் செய்தனர்.
ஒரு நாயிற்காக பல ஆயிரம் டாலர் பணத்தை செலவழிப்பதை பார்க்கும் போது , மிக வேதனையாக இருக்கிறது. தத்தெடுப்பதற்காக பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் காத்திருக்கின்றன. அந்த குழந்தைகளை தத்தெடுத்திருக்கலாம் ;அல்லது பசியால் வாடும் பல குழந்தைகளுக்கு உணவளித்திருக்கலாமென வலைத்தளவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.