Latestமலேசியா

வறுமை இல்லா நகராக கோலாலம்பூர் உருவாக்கப்படும்

கோலாலம்பூர், பிப் 6 – கோலாலம்பூர் நகர் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக,  ‘மலேசிய குடும்ப நல்வாழ்வு திட்டத்தை’ பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்திருக்கின்றார்.

வறுமை இல்லா நகராக கோலாலம்பூர்  பெருநகரை உருவாக்கும் முயற்சியில் அந்த திட்டத்தை  DBKL  கோலாலம்பூர் மாநகர் மன்றம்  செயல்படுத்துமென அவர் தெரிவித்தார். கோலாலம்பூர்  நகரின் 50-ஆம் நிறைவு ஆண்டு கொண்டாட்டத்தில்  பிரதமர் அந்த திட்டத்தை அறிவித்தார்.

கோலாலம்பூர் மலேசிய குடும்ப நல்வாழ்வு திட்டத்தின் கீழ், சாலையோர அங்காடி கடைகள்  தரம் உயர்த்தப்படுவதோடு,  தலைநகர் மக்களுக்கு  வாடகைக்கு விடுவதற்காக  5,000 Council Home’  எனும் வீடுகள் கட்டப்படும்.   PPR மக்கள் வீடமைப்புத் திட்டப் பகுதியில் உள்ள 306 மின்தூக்கிகள்  ஈராண்டு கால கட்டத்தில்  பழுது பார்க்கப்படும்.

CCTV ரகசிய காமிராக்களின் மூலமாக தலைநகர் மக்களின்   பாதுகாப்பும் உறுதி செய்யப்படுமென பிரதமர் தமதுரையின்போது  தெரிவித்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!