
ரியல் மாட்ரிட் (Real Madrid) அணி ஆட்டக்காரர் வினிசியல் ஜூனியரிடம் (Vinicius Jr) இனத்துவேசமாக நடந்து கொண்டதை அடுத்து, வலென்சியா (Valencia) அணிக்கு அபராதமும், ஐந்து ஆட்டங்களின் போது, அரங்கின் ஒரு பகுதியை மூட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் போது, பிரேசில் நாட்டவரான வினிசியசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட இனத்துவேச தாக்குதல் தொடர்பில், ஸ்பெயின் போலீசார் இதுவரை மூவரை கைதுச் செய்துள்ளனர்.
வலென்சியாவிற்கு 45 ஆயிரம் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, மெஸ்டல்லா (Mestalla) அரங்கின் ஒரு பகுதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த முடிவை எதிர்த்து வலென்சியா, பத்து வேலை நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
இதனிடையே, 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முடிவுற்ற அந்த ஆட்டத்தின் 97-வது நிமிடத்தில், நடுவரின் தவறான மதிப்பீட்டால், திடலை விட்டு வெளியேற்றப்பட்ட 22 வயது வினிசியஸ் இடைநீக்கம் செய்யப்படமாட்டார் என ஸ்பெயின் காற்பந்து கூட்டமைப்பு கூறியுள்ளது.