கிள்ளான், மார்ச் 7 – 2018ஆம் ஆண்டு முதல் தனது வயது குறைந்த வளர்ப்பு மகளை 50 முறை கற்பழித்த 33 வயது ஆடவருக்கு விதிக்கப்பட்ட 1,050 ஆண்டு சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் 42 ஆண்டு சிறைத்தண்டனையாக குறைத்தது. கடந்த ஆண்டு செஷன்ஸ் நீதிமன்றம் அந்த ஆடவருக்கு வழங்கிய நீண்ட கால தண்டனை ஏற்புடையது அல்ல என்பதோடு உணர்ச்சியின் அடிப்படையின் வழங்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதி Azmi Abdullah தீர்ப்பளித்தார். எனினும் அதோடு அந்த ஆடவருக்கான 24 பிரம்படிகளையும் Azmi Abdullah தொடர்ந்து நிலைநிறுத்தினார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அப்போது 12 வயதாக இருந்த தனது வயது குறைந்த வளர்ப்பு மகளை 2020 ஆம் ஆண்டுவரை 50 முறை கற்பழித்த குற்றத்திற்காக அந்த ஆடவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி நீதிபதி எம்.குணசுந்தரி 1,050 ஆண்டுகள் சிறை மற்றும் கூடியபட்சம் 24 பிரம்படி வழங்குவதாக தீர்ப்பளித்திருந்தார். அந்த தண்டனைக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்கள் KA Ramu மற்றும் V Vemal Arasan ஆகியோர் மேல் முறையீடு செய்திருந்தனர்.
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்13 hours ago