
கோலாலம்பூர் , ஜூலை 21 – இன்று நண்பகல் 12 மணியளவில் பங்கசாரில் உள்ள கார் பராமரிப்பு மையத்திற்கு பிரபல வழக்கறிஞரான சித்தி காசிம் தனது காரை பழுதுபார்க்க அனுப்பிய போது வெடிகுண்டு போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து கார் பராமரிப்பு பணியாளார்கள் இதனை பற்றி உடனே போலீஸ் மற்றும் கார் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனை அடுத்து வெடிகுண்டு அகற்றும் பிரிவை சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சோதனையில் காரின் பின்புறமுள்ள டயருக்கு பின்னால் கம்பிகள் நிரப்பப்பட்ட இரண்டு பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது .
அவை வெடிக்கும் சாதனமாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகித்ததை அடுத்து வாகன சேவை மையம் அமைந்திருந்த பகுதி பொதுமக்களுக்காக சுமார் 100 மீட்டர் வரை மூடப்பட்டது.
வெடிக்கும் சாதனம் என நம்பப்பட்ட அந்த இரண்டு பாட்டில்களையும் வெடிகுண்டு படையினரின் சோதனையிட்டதில் அது IED எனப்படும் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் என தெரியவந்தது.
பாதுகாப்பாக காரிலிருந்து அகற்றப்பட்ட அவ்விரு பாட்டில்களும் ஆய்வுக்காக நிபுணர்களிடம் அனுப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சித்தி காசிமிடம் இது குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், பேச்சு வாக்கில் அவருக்கு எதிரிகள் யாரும் இல்லை என்பதும் தெரிவந்திருப்பதாக கூறியுள்ளார் துணை கமிஷனர் அமிஹிஷாம்.
இச்சம்பவம் குறித்து பல கோணங்களில் போலிஸ் விசாரித்து வருகிறது.