Latestமலேசியா

வழக்கை ரத்து செய்வதிலும், கோபால் ஶ்ரீராமை நீக்குவதிலும் ரோஸ்மா தோல்வி

புத்ராஜெயா,டிச 6 – தாம் எதிர்நோக்கியிருக்கும் பள்ளிகளுக்கான சூரிய மின் கதிர் திட்டம் தொடர்பான ஊழல் வழக்கை ரத்து செய்வதிலும், அந்த வழக்கின் எதிர் தரப்பில் தலைமை வழக்கறிஞராக இருக்கும் Datuk Seri Gopal Sri Ram-மை நீக்குவதிலும், டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் மீண்டும் தோல்வி கண்டார்.

தமக்கு எதிராக இதற்கு முன்பு, உயர் நீதிமன்றம் விதித்திருந்த முடிவினை எதிர்த்து ரொஸ்மா மன்சோர் மேல் முறையீடு செய்திருந்தார்.

அந்த மேல் முறையீட்டினை, இன்று நீதிபதி Datuk Hanipah Farikullah தலைமையில் கூடிய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினர் நிராகரித்தனர். ரொஸ்மாவின் கோரிக்கை தொடர்பில் முடிவெடுக்க குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என தமது தீர்ப்பில் நீதிபதி Datuk Hanipah தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!