Latestமலேசியா

வழித் தவறி தங்கும் விடுதிக்கு வந்த ‘தாபிர்’ – மலாக்கா மிருகக் காட்சி சாலைக்கு மாற்றப்பட்டது

மலாக்கா, ஜன 2 – மலாக்கா, Bandar Hilir – ரில் உள்ள தங்கும் விடுதியொன்றில் கார் நிறுத்துமிடத் தளமான ஐந்தாவது மாடியில் , வழித்தவறி சிக்கிய ‘Tapir’ விலங்கு பிடிக்கப்பட்டு, மலாக்கா மிருகக் காட்சி சாலைக்கு மாற்றப்பட்டது. தனது வாழ்விடப் பகுதியில் இருந்து கடந்த இரு வாரங்களாக காணாமல் போயிருந்த அந்த விலங்கினைப் பிடிக்க தீயணைப்பு படையினரும் , மாநில வனவிலங்கு துறையினரும் சுமார் 4 மணி நேரம் எடுத்துக் கொண்டனர்.

இதற்கு முன்பு, சில இடங்களில் அந்த விலங்கு தென்பட்டதாக அழைப்பு கிடைத்தும், அதன் இருக்குமிடத்தை கண்டுபிடிக்காமல் போனது. இறுதியாக, வாகனங்கள் செல்லும் பகுதி வழியாக ஐந்தாவது மாடி வரை ஏறிச் சென்று சிக்கிக் கொண்ட ‘Tapir’ – ரை பாதுகாப்பாக பிடிக்க முடிந்ததாக மலாக்கா வனவிலங்கு பாதுகாப்பு துறையின் இயக்குநர் Mohd Firdaus Mahmood தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!