
கோலாலம்பூர், நவ 2 – வாகனங்களில் பயன்படுத்தப்படும் இருண்ட கண்ணாடியின் விதிமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக இதுவரை எந்தவொரு தனிப்பட்ட வாகன உரிமையாளரும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்டதில்லையென போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். இதனை சாலை போக்குரத்துத்துறையான ஜே.பி.ஜே உறுதிப்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். இருண்ட கண்ணாடியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக இதுவரை எவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.
எனவே இருண்ட கண்ணாடியை வாகனங்களில் பயன்படுத்தியதற்காக இதுவரை அரசாங்கம் எவருக்கும் சிறை தண்டனை விதித்தது கிடையாது எனபதே பொதுமக்களுக்கான தமது இந்த விளக்கம் என அந்தோனி லோக் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தமது அமைச்சு நிலையிலான 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.