Latestமலேசியா

வாகனங்கள் உரிசிக் கொண்டதை தொடர்ந்து தகரறில் ஈடுபட்டனர் – இருவர் காயம்

பத்து பஹாட், ஏப் 3 – ஆயர் ஹீத்தாம் , தாமான் பஹாகியா, ஜாலான் பஹாகியா 1 இல் தங்களது வாகனங்கள் நேற்று உரசிக்கொண்டதைத் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்ட இரு ஆடவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான காணொளி இன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. நேற்று மாலை மணி 6.20 அளவில் நடைபெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து அது குறித்து விவாதிக்க இரு நபர்களில் ஒருவர் வாகனத்தை நிறுத்தி விவாதிக்காமல் சென்றதால் இந்த தகராறு மூண்டதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் ஷாருல்அனுவார் முஸ்ஹடாட் அப்துல்லா சனி
( Shahrulanuar Mushaddat Abdullah Sani ) தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 38 மற்றும் 59 வயதுடைய இருவர் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர்களின் வாகனம் ஜாலான் பஹாகியா வழியாகச் செல்லும் போது பக்க கண்ணாடியில் உராய்ந்துள்ளதுதாக கூறப்பட்டது.

ஒரு தரப்பினர் நிறுத்தாமல் தொடர்ந்து வாகனம் ஓட்டியதால் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே சண்டை நடக்கும் முன் கடைவீதியில் வாக்குவாதம் ஏற்பட்டதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் Shahrulanuar தெரிவித்தார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில் பதிவு செய்யப்பட்ட போதிலும் அந்த பதிவு முழு சம்பவத்தையும் காட்டவில்லை. இதனைத் தொடர்ந்து பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு இரவு மணி 8.23 க்கு ஒரு அறிக்கை வந்ததைத் தொடர்ந்து அந்த இருவரும் சாட்சியம் அளிக்க வந்தனர். 59 வயதான ஆடவருக்கு வாய் மற்றும் கன்னத்தில் காயங்கள் ஏற்பட்ட வேளையில் , மற்றொரு நபரும் கன்னத்தில் காயம் அடைந்தார். பொது இடத்தில் கலவரம் செய்ததற்காக குற்றவியல் சட்டம் 160வது பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Sharulanuar தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!