கோலாலம்பூர், பிப் 15 – ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவைகளுக்கான வாகனங்களுக்கு சாலையில் இதர வாகன ஓட்டுனர்கள் வழிவிட வேண்டும் எனபது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
ஆனால், எல்லோருக்குமே அவசரம் என்ற பட்சத்தில், பிரமுகர்களும் கார்கள் மற்றும் அந்த காரை பின் தொடரும் கார்களுக்கும் நாம் வழி விட வேண்டும் என்பது சட்டவிதியா என கேள்வி எழுப்பியுள்ளார் வளைத்தளவாசி ஒருவர்.
நேற்று மதியம் Bandar Saujana Putra நெடுஞ்சாலையில் தாம் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு பிரமுகரின் கார் கடந்து சென்றது. சைரன் சத்தம் ஒலித்துக் கொண்டிருக்க, தான் இடது பக்கம் செல்வதற்குள் அந்த பிரமுகரின் காரை பின் தொடர்ந்துவந்த பாதுகாப்பு வாகனம் ஒன்று தன் காரை உரசியதில், தன் கார் கண்ணாடி உடைந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் ஆடவர் ஒருவர்.
இது வைரலாக, ஏற்கனவே ஆதங்கத்தில் இருந்த இதர வலைத்தளவாசிகளும் தங்களின் கருத்துகளை தற்போது பதிவிட்டு வருகின்றனர்.