![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/01/a76a76f9-409b-423b-b791-07ba1ff64ee3.jpg)
கோலாலம்பூர், ஜனவரி-8 – PUSPAKOM எனப்படும் கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகள் உடனடி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்சம் வாங்கிக் கொண்டு கனரக வாகனங்களுக்கான பரிசோதனைகளை அவர்கள் சட்டவிரோதமாக அங்கீகரித்ததாக சந்தேகிக்கப்படுவதே அதற்குக் காரணம்.
அதனைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய PUSPAKOM-மின் தலைமை செயலதிகாரி மஹ்மூட் ரசாக் பஹ்மான் (Mahmood Razak Bahman), அதிகார துஷ்பிரயோகத்தை அந்நிறுவனம் ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.
ஊழலில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் அவர்களைப் பாதுகாக்க மாட்டோம் என மஹ்மூட் ரசாக் சொன்னார்.
அவ்விவகாரம் குறித்து PUSPAKOM அளவில் உள்விசாரணையும் நடைபெறுகிறது.
அதில் சிக்குவோர் நிச்சயம் அதிகாரத் தரப்பிடம் ஒப்படைக்கப்படுவர் என்றார் அவர்.
முன்னதாக அந்த 6 அதிகாரிகள் உட்பட 8 பேரை மலேசிய ஊழல் தடுப்பாணையமான MACC கைதுச் செய்தது.
வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டதும் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், runner-ராக செயல்பட்ட மேலுமிருவர் 5 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.