Latestஉலகம்

வாகனமோட்டும் தேர்வில் ஆள்மாறாட்டம்; மலேசியருக்கு சிங்கப்பூரில் சிறை

சிங்கப்பூர், செப் 23- வாகனமோட்டும் லைசென்சைப் பெற , தனக்குப் பதிலாக இன்னொருவரை பணம் கொடுத்து அனுப்பி வைத்த ஆடவருக்கு, இறுதியில் 2 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Goh Ah Hock எனும் அந்த மலேசியர், தனது மலேசிய வாகனமோட்டும் லைசென்சை, சிங்கப்பூரின் வாகனமோட்டும் லைசென்சுக்கு மாற்ற விரும்பினார்.

அதற்காக நடத்தப்படும் , எழுத்துப் பூர்வமான தேர்வில் தேர்ச்சிப் பெற வாய்ப்பில்லை என கருதிய அந்த ஆடவர், தனக்குப் பதிலாக வேறொருவர் அத்தேர்வை எழுத 500 சிங்கப்பூர் டாலர் கொடுத்திருக்கின்றார்.

எனினும், அவருக்குப் பதிலாக தேர்வெழுத சென்ற ஆடவர், தேர்வு கண்காணிப்பாளரால் பிடிப்பட்டார்.
அதையடுத்து, ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்ற முயன்றதாக அந்த மலேசியருக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!