
வாகனமோட்டிகள் இனி தங்கள் வாகனம் ஓட்டும் அனுமதியை, பத்தாண்டுகள் வரையில் புதுப்பித்துக் கொள்ளலாம் என, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இதற்கு முன், ஆண்டுதோறும் அல்லது அதிகபட்சமாக ஐந்தாண்டுகள் வரையில், வாகனமோட்டிகள் தங்கள் வாகனமோட்டும் அனுமதியை புதுப்பித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், புதிய அறிவிப்பின்படி, அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி, வாகனம் ஓட்டும் அனுமதியை, பத்தாண்டுகளுக்கு புதுப்பிக்க, சாலை போக்குவரத்து துறை அலுவலகம் அல்லது முகப்புகளில் வாகனமோட்டிகள் விண்ணப்பம் செய்யலாம் என அந்தோணி லோக் தெரிவித்தார்.
அதே சமயம், வாகனம் ஓட்டும் அனுமதியை பத்தாண்டுகளுக்கு புதுப்பிக்க விரும்பும் வாகனமோட்டிகளுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு புதுப்பிக்கும் கட்டணம் மட்டுமே விதிக்கப்படும்.
வாகனம் ஓட்டும் தகுதியை பெற்ற மலேசியர்களுக்கு மட்டுமே அந்த சலுகை வழங்கப்படும்.