
கூலிம் , மார்ச் 18 -கூலிம் தாமான் பேராக்கில் கட்டுப்பாட்டை இழந்த Honda SUV வாகனம் கவிழ்ந்து சாலையோரத்திலுள்ள ஒரு வீட்டில் மோதியதில் அந்த வாகனத்தை ஓட்டிய 45 வயதுயை ஆடவரும் முன்புறம் அமர்ந்திருந்த அவரது 15 வயது மகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அந்த வீட்டில் குடியிருந்த நால்வர் வெளியே சென்றிருந்தபோது அந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுவதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Mohd Redzuan Salleh வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். சாலை முச்சந்தியில் வலது பக்கம் நுழைந்து Taman Emas சிற்கு செல்ல வேண்டிய அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள வீட்டில் மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த இருவரும் கூலிம் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றனர்.