Latestமலேசியா

வாகன திருட்டுக் கும்பல் முறியடிப்பு

கோத்தா சமரஹான், ஏப் 9 – வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி அதன் உபரிப் பாகங்களை விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டது.

இக்கும்பலை சேர்ந்த 5 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 21, 41 மற்றும் 31 வயதுடைய மூன்று ஆடவர்களுடன் 17 மற்றும் 29 வயதுடைய இரண்டு பெண்களும் அடங்குவர் என Kota Samarahan மாவட்ட போலீஸ் தலைவர் துணை Superintendan Jaimi Husin தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இக்கும்பல் வாகனங்களையும் மோட்டார் சைக்கிள்களையும் திருடி அதன் உபரி பாகங்களை அண்டை நாட்டிற்கு விற்பனை செய்து வந்திருக்கிறது.

அந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் சில வாகனங்கள் திருட்டு சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டதாக Jaimi கூறினார்.

அந்த நபர்கள் Kota Samarahan, கூச்சிங், Simunjan மற்றும் Bintulu-விலும் வாகனங்களை திருடியிருப்பதாக Jaimi தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஏற்கனவே 11 குற்றப் பின்னணிகளை கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர் மலாக்கா ஜாசின் போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்திவரும் மோசடி சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!