கோலாலம்பூர், மார்ச் 7 – ஜோகூர் மாநிலத் தேர்தலில் மஇகா மொத்தம் நான்கு தொகுதிகளிப் போட்டியிடும் நிலையில் , அக்கட்சியின் ஒரே பெண் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் சரஸ்வதி நல்லதம்பி, வாக்காளர்களின் மனதை வெல்லும் தீவிர பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
கெமெலா ( Kemela ) சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக வேட்பாளராக போட்டியிடும் ஜோகூர் மஇகா மகளிர் பிரிவின் தலைவருமான அவர், சுகாதார சேவையை பெறுவதில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை, வேலை வாய்ப்பு போன்ற விவகாரங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படுமென உறுதியளித்திருக்கின்றார்.
வர்த்தகத்தில் பரந்த அனுபவத்தையும் கொண்டுள்ள சரஸ்வதி, தமக்கு வாக்காளர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில், பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்களிலும் முக்கியத்துவம் செலுத்தப்படுமென என குறிப்பிட்டார்.
ஃபெல்டா கெமெலா தொகுதி மொத்தம் 33,702 வாக்காளர்களைக் கொண்டிருக்கும் நிலையில், அத்தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. அத்தொகுதியில் பெரிக்காத்தான் நெஷனல் சார்பில் பெண் வேட்பாளரும், கெஅடிலான், பெஜுவாங் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கடந்த 14 -வது தேர்தலில் அமானா கட்சி அத்தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.