ஜோகூர் பாரு, பிப் 14 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலின்போது அம்மாநிலத்திலுள்ள இடைநிலைப் பள்ளிகள் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்படுவதை கல்வி அமைச்சு விரும்பவில்லை. SPM தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சுமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே அந்த ஏற்பாடுகளில் பாதிப்பு ஏற்படக்கூடாது என கல்வி அமைச்சர் Radzi Jidin தெரிவித்தார். கோவிட் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.எம் மாணவர்கள்தான். எனவே ஜோகூர் தேர்தலின்போது இடைநிலைப்ப பள்ளிகள் வாக்கு சாவடிகளாக பயன்படுத்தப்பட்டால் SPM தேர்வுக்கான ஏற்பாடுகள் பாதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்3 hours ago