
கோலாலம்பூர், ஜன 2 – கார் இழுக்கும் கும்பலுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, வர்த்தகர் ஒருவர் கைத்துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய வேளை, அச்சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர். சபா, Tawau –வில் கார் நிறுத்துமிடத் தளத்தில் நிகழ்ந்த அந்த சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட இரு தரப்பிடமிருந்தும் போலீஸ் வாக்குமூலம் பெற்றிருப்பதாக, அம்மாவட்ட போலீஸ் தலைவர் Jasmin Hussin தெரிவித்தார். இவ்வேளையில், சம்பந்தப்பட்ட வர்த்தகர் கைத்துப்பாக்கிக்கான லைசென்சை பெற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக அவர் கூறினார்.