
கோலாலம்பூர், மார்ச் 29 – மலேசிய கும்பலின் மூலம் வாடகைக்கு பெற்ற மை கார்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற பிலிப்பின்ஸ் ஆடவன் கைது செய்யப்பட்டான். கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அந்த சட்டவிரோத குடியேறி பிலிப்பின்ஸில் ராணுவ பயிற்சி பெற்றதோடு ஆயதங்களை கையாள்வதில் திறன் பெற்றிருப்பதாகவும் விசாரணை மூலம் தெரியவந்துள்து. முதலில் சபாவில் சட்டவிரோதமாக நுழைந்துள்ள 30 வயதுடைய அந்த ஆடவன் பின்னர் மை கார்டை பயன்படுத்தி தீபகற்ப மலேசியாவில் நுழையமுயன்றபோது கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தகவல்கள் கூறின.
பிலிப்பின்ஸ் நாட்டின் பாதுகாப்பு படையில் இணைவதற்கு தகுதி பெறும் நோக்கத்தில் 44 நாள் ராணுவ தகுதிப் பயிற்சியை மேற்கொண்டுள்ள அந்த சட்டவிரோத குடியேறி நாட்டிற்குள் நுழைந்திருப்பது தேசிய பாதுகாப்பிற்கு மிரட்டலாகும் என
எம்.ஏ.சி .சி கருதுகிறது.