
சிலாங்கூர், பண்டார் சன்வேயிலுள்ள, வீடொன்றில், அந்நிய நாட்டவர்களுக்கு பாலியல் சேவையை வழங்கி வந்ததாக நம்பப்படும், இரு ஸ்ரீ லங்கா பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை, இரவு மணி 11 வாக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி OP NODA சோதனை வாயிலாக,அந்த ஒழுங்கீன செயல் வெளிச்சத்துக்கு வந்ததாக, சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 30 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் ஆவர்.
அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டிலிருந்து, விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆணுறைகள் உட்பட ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டதாக, வான் அஸ்லான் சொன்னார்.
நடுவர் ஒருவர் உதவியோடு, கடந்த மூன்று மாதங்களாக, வெறும் 60 ரிங்கிட் கட்டணத்தில், அவ்விரு பெண்களும் சேவையை வழங்கி வந்ததும் தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணைக்கு உதவும் பொருட்டு இம்மாதம் 23-ஆம் தேதி வரையில், 14 நாட்களுக்கு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.