
தலைநகரிலுள்ள, பேரங்காடி ஒன்றில், வாடிக்கையாளர்கள் உடை மாற்றும் அறையில் CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில், போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
பேரங்காடியின் உடை மாற்றும் அறையில் பதிவுச் செய்யப்பட்ட காணொளி ஒன்று, ட்விட்டரில் வெளியிடப்பட்டதை அடுத்து போலீஸ் விசாரணையை தொடங்கியதாக, டாங் வாங்கி போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் Noor Dellhan Yahaya தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பில், நேற்று மாலை மணி 4.38 வாக்கில் புகார் ஒன்று பெறப்பட்ட வேளை; எங்கு, எப்பொழுது அச்சம்பவம் நிகழ்ந்தது என்பது உட்பட அனைத்து விவரங்களும் ஆராயப்பட்டு வருவதாகவும் Noor Dellhan சொன்னார்.