Latestமலேசியா

வாடிக்கையாளர் போல் நடித்து நகையை திருடியவர் பிடிபட்டார்

அலோஸ்டார் , செப் 24 – கெடா, அலோஸ்டார், ஜாலான் புத்ராவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வாடிக்கையாளர் போல் நுழைந்து , 30,000 ரிங்கிட் தங்க வளையல்களை திருடிய நபர் அங்கிருந்த பொதுமக்களால் பிடிக்கப்பட்டார். மாலை 5 மணியளவில் ஆடவர் ஒருவர் அக்கடைக்குள் நுழைந்து வாடிக்கையாளரைப் போல் 99.34 கிராம் எடையுள்ள தங்க வளையல்களை வாங்குவதுபோல் அதனை கையில் பிடித்து பார்த்துக்கொண்டிருந்தார் என கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் உதவி ஆணையர் Ahmad Shukri கூறினார். திடிரென்று அந்த சந்தேக நபர் அங்கிருந்து நகையை எடுத்துக்கொண்டு ஒடியதைத் தொடர்ந்து அவரை பொதுமக்கள் துரத்திப் பிடித்தனர் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!