
கோலாலம்பூர், மார்ச் 12 – கை தொலைபேசி பயனர்கள் WhatsApp புலனத்தின் சேவையை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். சிறியோர் முதல் பெரியோர்வரை தினசரி பயன்படுத்திக்கொண்டிருக்கும் செயலியாக வாட்சப் திகழ்கிறது. தவல்களை பரிமாறிக்கொள்வதற்கும் புகைப்படங்களை பகிர்ந்துகொள்வதற்கும் இன்டர்நெட் வசதி இருந்தால் உலகில் எங்கிருந்தாலும் நாம் பேச நினைப்பவர்களுடன் உடனடியாக வாட்சப் செயலி மூலம் பேச முடியும்.
இப்போது அந்த செயலியை மேலும் நவீனமுறையில் மேம்படுத்துவதற்காக அதில் பல்வேறு புதிய அம்சங்களை இடம்பெறச் செய்வதறகான நடவடிக்கைகளை வாட்சப் மேற்கொண்டு வருகிறது. ஒருவர் உருவாக்கும் வாட்சப் குழுவில் பயனர் இணைந்தப் பிறகு அதில் எவ்வளவு காலம் இருப்பது என்பதை அவரே முன்கூட்டியே முடிவு செய்துக் கொள்ளலாம். எவ்வளவு காலம் என்பதற்கேற்ப ஒருவர் அக்குழுவில் இருப்பதற்கான காலாவதி தேதியை நிர்ணயித்து விடும் வகையில் வாட்சப் செயலியை மேம்படுத்தவுள்ளது.
அந்த தேதி வந்ததும் தானாகவே அவர் அக்குழுவில் வெளியேறிவிடுவார். ஒருகால் அவர் தொடர்ந்து நீடிக்க விரும்பினால் காலாவதி தேதியை அவர் மீண்டும் மாற்றிக் கொள்ளலாம். அவர் இருக்கிறாரோ இல்லையோ அக்குழு தொடர்ந்து செயல்படும். பயனர்களுக்கு கூடுதல் வசதியாக அமையவுள்ள இந்த அம்சம் விரைவில் வாட்சப்பில் வரவுள்ளது.