
புத்ரா ஜெயா, மே 16- அண்மைய காலமாக வெப்ப தாக்கம் மிகவும் மோசமாக இருப்பதால் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முதலாளிகள் முன்னுரிமை வழங்க வேண்டும் என மனித வள அமைச்சர் வி. சிவகுமார் வலியுறுத்தினார். வெப்ப தாக்கத்தால் அண்மையில் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார கூறியிருப்பதை நாம் சாதாரணமாக கருத முடியாது. கூடுதலான வெப்ப சீதோஷ்ணம் மனித உடலில் உடல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதீத வெப்பத்தின் விளைவுகளை எவ்வாறு தடுப்பது அல்லது குறைப்பது என்பதில் அனைவரும் அக்கறையுடன் செயல்பட வேண்டும். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் பொதுமக்கள் அதிகமான நீரை அருந்த வேண்டும்
அனைத்து முதலாளிகளும் இந்த பிரச்சினையை அறிந்திருக்கிறார்கள் மற்றும் தற்போதைய கடுமையான வெப்ப சூழ்நிலை காலத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென சிவகுமார் கேட்டுக்கெண்டார்.