
வாஷிங்டன், ஆகஸ்ட்டு 18 – வானத்தில் இருந்து மர்மமான முறையில், மின்சார துணை மின்நிலையத்திலுள்ள, டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து மீனால் ஏற்பட்ட வெடிப்பால், நியூஜெர்சியில் சில மணி நேரத்திற்கு மின் விநியோகத் தடை ஏற்பட்டது.
அதனால், சுமார் ஈராயிரத்து 100 பேர் வசிக்கும் Sayreville பகுதி இருளில் மூழ்கிக் கிடந்ததாக, உள்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், மீனை கொத்திக் கொண்டு பறந்து சென்ற பறவை அதனை தவறவிட்டதால், அது எதார்ச்சையாக டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து, அந்த வெடிப்பு ஏற்படிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
அச்சம்பவத்தை, Sayreville போலீசாரும் தங்கள் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.