பெய்ஜிங், ஆகஸ்ட் 25 – வார இறுதி விடுமுறையில் நீண்ட நேரம் தூங்குவது உடல் ஆரோக்கியத்துக்கு குறிப்பாக இதய ஆரோக்கியத்துக்கு நல்லதென அண்மைய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
3,400 அமெரிக்கர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அது தெரிய வந்தது.
ஆய்வில் பங்கேற்றோரில் வார நாட்களை விட, வாரக் கடைசியில் குறைந்தது ஒரு மணி நேரமாவது கூடுதலாக உறங்கியர்களிடம் நல்ல மாற்றம் தெரிந்துள்ளது.
வேலை நாட்களில் விட்ட தூக்கத்தை வாரக் கடைசியில் ஈடுகட்டாதவர்களை விட, கூடுதல் நேரம் உறங்கியவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவே என அதில் கண்டறியப்பட்டது.
எனவே, வாரம் முழுக்க வேலைப் பளுவால் தூக்கம் கெட்டாலும், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் ‘சிரத்தை’ எடுத்தாவது தூங்கி ஓய்வெடுப்பது உடலுக்கு நல்லது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.