Latestமலேசியா

விசா காலத்தைத் தாண்டி தங்கியிருந்த 41,234 பேர் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், நவம்பர்-21 – நாட்டில் விசா அனுமதி காலத்தை தாண்டி அதிக நாட்கள் தங்கியிருந்ததன் பேரில், ஜனவரி 1 தொடங்கி நவம்பர் 14 வரை 41,234 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) அதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு முழுவதும் அப்படி கைதானவர்களின் எண்ணிக்கை 27,739 பேர் மட்டுமே என்ற நிலையில் இவ்வாண்டு அது கணிசமாக உயர்ந்துள்ளது.

தங்களின் சமூகப் பயண அனுமதியை வேலை, படிப்பு உள்ளிட்ட மற்ற பெர்மிட்டுகளுக்கு மாற்றுவதற்காகவும் சிலர் விசா காலத்தைத் தாண்டி தங்குகின்றனர்.

சிலருக்கு, தங்களின் தனிப்பட்ட விஷயங்களை 30 நாட்கள் வரை தங்கியிருந்து முடிக்க சிறப்பு அனுமதிகளும் வழங்கப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் முறையானப் பயணப் பத்திரம் வைத்திருப்போர் மட்டுமே நாட்டுக்குள் நுழைவதை உறுதிச் செய்ய அரசாங்கம் தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் சொன்னார்.

வருபவர்கள், கண்காணிப்பு அல்லது கருப்புப்பட்டியலில் இருக்கக் கூடாது, சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கான டிக்கெட் வைத்திருக்க வேண்டும், வந்திறங்கியதும் டிஜிட்டல் அட்டையைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்பதும் அவற்றிலடங்கும்.

விசா அனுமதி காலம் முடிந்த கையோடு வெளிநாட்வர்கள் இந்நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சைஃபுடின் மக்களவையில் பதிலளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!