கோலாலம்பூர், செப்டம்பர் -2, ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கியதில் பள்ளத்தில் விழுந்து காணாமல் போன இந்தியச் சுற்றுப் பயணியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குது குறித்து, அரசாங்கம் முடிவெடுக்கும்.
நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அது விவாதிக்கப்படுமென, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஹ்தாபா (Dr Zaliha Mustafa) தெரிவித்தார்.
இழப்பீடு தொகை தொடர்பில் அன்றைய நாளே அறிவிப்பு வெளியாகலாம் என அமைச்சர் கோடிகாட்டினார்.
48 வயது விஜயலட்சுமியைத் தேடி மீட்கும் பணிகள், முக்குளிப்பு வீரர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் 9-வது நாளோடு நிறுத்தப்பட்டது.
உண்மை நிலவரம் விஜயலட்சுமியின் குடும்பத்தாருக்கு எடுத்துரைக்கப்பட்டு, தேடல் பணிகளை நிறுத்தும் முடிவுக்கு அவர்களும் ஒப்புக் கொண்டனர்.
மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையரிடமும் அம்முடிவு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜயலட்சுமியின் கணவர், மகன் மற்றும் சகோதரி நேற்று இந்தியா புறப்பட்டனர்.