
தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1 என, வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜூ கூறியிருந்தது பெரும் பரபரம்பை ஏற்படுத்தியது. அதனால் விஜய் இரசிகர்களும், அஜித் இரசிகர்களும் மோதிக் கொண்ட நிலையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும் சூரிய வம்சம் படத்தின் வெற்றி விழாவின் போதே தாம் அதனை கூறிவிட்டதாக சொன்னது பிரச்சனையை மீண்டும் தலைதூக்கச் செய்துள்ளது.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் அது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், “விஜய்தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார். அதனை தில்ராஜா சொல்ல வேண்டிய அவசியமில்லை. மக்களே விஜய்யை அந்த இடத்தில் வைத்து விட்டார்கள்” என பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர் தனியார் யூட்யூப் சேனலுக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்தது ரஜினி இரசிகர்களை சினமடையச் செய்துள்ளது. அதனால், ரஜினி இரசிகர்கள் சிலர், பிஸ்மி வீட்டை முற்றுகையிட்டதோடு, அவருடன் வாக்குவாத்திலும் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, சமூக ஊடகங்களிலும் நடிகர் விஜய்யை கிண்டல் செய்யும் “மீம்ஸ்கள்” வெளியிடப்பட்டு வருகின்றன.