
துன்.வீ. தி. சம்பந்தனாரின் 104 வது ஆண்டு பிறந்த நாள் பிரார்த்தனாள் மற்றும் “விண்ணில் மறைந்து மண்ணில் வாழ்கிறார் துன். வீ. தி. சம்பந்தன்” எனும் நூல் வெளியீட்டு விழா பேரா, சுங்கை சிப்புட்டில் உள்ள சுங்கை குருடா தோட்டத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
சுங்கை சிப்புட் தொகுதி காங்கிரசின் முன்னாள் தலைவரும் நூலாசிரியருமான மணிமாறன் கிருஷ்ணனின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் பெரும் திரளானோர் கலத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு மனிதவளம், சுகாதாரம் மற்றும் இந்திய சமூக விவகாரங்களுக்கான அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் சிறப்பு வருகை புரிந்து நூலினை அதிகாரப் பூர்வமாக வெளியீடு செய்தார்.
இதில் துன்.சம்பந்தனின் மகள் வழக்கறிஞர் தேவகுஞ்சரி வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துங்குவின் சேவைகள் குறித்தும் மற்றும் வரலாற்று நூல்கள் பல எழுதியபோதிலும் இங்கு மணிமாறன் எழுதிய இந்த நூல் எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய நூலாசிரியர் மணிமாறன் கிருஷ்ணன் , எனக்கு பிடித்த தலைவர்களில துன் சம்பந்தனும் ஒருவர், அவரை பற்றி நூல் எழுதவேண்டும் என்ற நீண்ட கால லட்சியம் நிறைவேறியது மகிழ்சியை அளிக்கிறது என கூறிய அவர் அனைவரும் படித்து எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம் மாணவர்கள் மத்தியிலும் சேரவேண்டும்
இதனிடையே இதற்கு ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினர்களுக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.