அமெரிக்க, ஆகஸ்ட் 19 – விண்வெளியில் ஒரு மணி நேரத்தில், 1 மில்லியன் மைல் வேகத்தில் நகரும் மர்ம பெருளை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பால்வெளியை வீட்டு இந்த பொருளானது 1 மில்லியன் மைல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
பிளானட் 9 என்ற திட்டம் மூலம் விஞ்ஞானிகள் இதனை கண்டறிந்து, அதற்கு CWISE J1249 என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இதனை விண்கல்லாகவோ, விண்மீன்களாகவோ வகைப்படுத்த முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இது வாயு நிறைந்த ராட்சத கிரகம் மற்றும் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் ஆகிய இரண்டு வரையறைக்கு இடைப்பட்ட பொருளாக வகைப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.