
அனைத்துலக விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு, அடுத்த மாதம் ஆள் இல்லாத காலி விண்கலன் ஒன்றை ரஷ்யா அனுப்பவுள்ளது.
ஏற்கனவே, மூன்று விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பயணமான Soyuz MS-22 விண்கலன் சிறு விண்கல் மோதி பழுதடைந்தது.
தற்சமயம் விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருக்கும் ரஷ்ய விண்வெளி வீரர்களின் பணி மார்ச் மாதம் வாக்கில் நிறைவடையும் என்பதால், அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர, அடுத்த மாதம், 20-ஆம் தேதி, அந்த ஆள் இல்லாத Soyuz MS-23 விண்கலன் அனைத்துலக விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு பாய்ச்சப்படுமென, ஓர் அறிக்கையின் வாயிலாக ரஷ்யா தெரிவித்தது.