
ஷா ஆலாம், ஆக 18 – விதி எப்போது எப்படி ஒருவரின் வாழ்க்கையில் விளையாடும் என கணிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது எல்மினா விமான விபத்தில் மோட்டார் சைக்களோட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழக்க நேர்ந்த சம்பவம்.
கெடா, சிடாம்-மைச் சேர்ந்த முஹமட் ஆபிஸ் முஹமட் சாலே, (Muhamad Hafiz Muhamad Salleh) எனும் அவ்வாடவர் 2017-ல் மாரா கல்லூரியில் படிப்பை முடித்தபின் கோலாலம்பூருக்கு மாற்றலாகி உணவு வினியோகிப்பு மோட்டாரோட்டியாக வேலை செய்து வந்துள்ளார்.
குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் மூத்தவரான அவருக்கு வயது 30 இருக்கும் என அவரது நெருங்கிய உறவுக்கார சகோதரியான நூரூல் நசிஹா (Nurul Nazihah) தெரிவித்துள்ளார்.
Muhamad Hafiz மிக அமைதியாகவும் அன்பாகவும் பழகக்கூடியவர் என கவலையோடு நினைவுகூர்ந்தார் அவர்.
அடுத்த வாரம் ஒரு விருந்துக்காக கெடா வரவிருந்த அவர் திடீரென இவ்விபத்தில் யாரும்
எதிர்ப்பாரா வகையில் சிக்கி பலியானது மிக வருத்தமளிப்பதாகவும் நூருல் தெரிவித்தார்.
விமான விபத்து பற்றி மதியம் 4 மணியளவில் அறிந்திருந்தாலும் Muhamad Hafiz இறந்தது பற்றி போலிஸ் வந்து சொன்னவுடன்தான் தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார்.