Latestமலேசியா

விந்தணு தானம் மோசடியில் RM 25,000 பணத்தைப் பறிகொடுத்த 49 வயது ஆடவர்

கோலாலம்பூர், செப்டம்பர் 24 – விந்தணு தானம் செய்தால் 1 மில்லியன் ரிங்கிட் பணம் கிடைக்கும் என்ற முகநூல் விளம்பரத்தை நம்பி, 49 வயது ஆடவர் ஒருவர் 25,000 ரிங்கிட் பணத்தை இழந்திருக்கிறார்.

அழகான பெண்ணின் படத்துடன் வெளியான அவ்விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட லீ என்ற அந்த ஆடவர், இணைய இணைப்பின் மூலம் தமது தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரைச் சேர்ந்தவர் எனத் தன்னை அடையாளப்படுத்தி கொண்ட பெண் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் அவரைத் தொடர்புகொண்டு, விந்தணு தானத் திட்டத்தில் பாலியல் உறவுகொள்வது அடங்கும் என்று கூறியுள்ளார்.

அதற்கு லீ-யிடமிருந்து இசைவு வந்தவுடன், முதற்கட்டமாக அந்த பெண்ணின் வழக்கறிஞருடன் இணைப்பதற்கு 1,000 ரிங்கிட் செலுத்துமாறு பணித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வழக்கறிஞராகக் கூறப்பட்டவரிடமிருந்து லீக்கு, ஒப்பந்த விவரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 48 மணி நேரத்திற்குள் லீக்கு 300,000 ரிங்கிட் தரப்படும் என்ற போலியான வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதியின் செலவுகள் உட்பட அனைத்தும் அந்த பெண் ஏற்றுக்கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர், செயல்பாட்டுக் கட்டணம் எனக் கூறி 24,000 ரிங்கிட்டையும் அந்த வழக்கறிஞர் கேட்டுள்ளார். அதனையும் லீ செலுத்திவிட்டார்.

அதன்பிறகும் அவ்வழக்கறிஞர் தம்மிடம் 30,000 ரிங்கிட்டைக் கேட்கவே, தாம் மோசடிக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ந்த லீ, போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!