
ஜெலுபு, செப் 26 – விபத்துக்குப் பின் காரும் லோரியும் ஆறு மீட்டர் உயரத்தில் மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தில் விழுந்தன. புக்கிட் தங்காவுக்கு அருகே ஜெலுபு தாமான் EKo – Rimba வில் இன்று காலையில் நிகழ்ந்த அந்த விபத்தில் கார் ஓட்டுனர் கருகி மாண்டார். காலை மணி 9.26அளவில் புரோட்டோன் பெசோனா கார் ஒன்று லோரியுடன் விபத்துக்குள்ளானது குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.