
கோலாலம்பூர், செப் 15 – ஹெல்மினாவில் சிறு ரக விமானம் விபத்துக்குள்ளானதற்கு முன்னதாக அந்த விமானத்தின் இரண்டு விமானிகளும் நலமாக இருந்தனர். அந்த இரண்டு விமானிகளும் போதுமான ஓய்வில் இருந்துள்ளனர். அவர்கள் மருத்துவ பிரச்சனை எதனையும் எதிர்நோக்கவில்லையென அந்த விமான விபத்து குறித்து விசாரணை குழு வெளியிட்ட முன்னோடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.