Latestமலேசியா

விபத்தில் சம்பந்தப்பட்ட கொள்கலன் லோரி ஓட்டுனரை தாக்கிய இருவர் பிடிபட்டனர்

கிள்ளான், மார்ச் 28 – கிள்ளான் Kampung Telok Gong கில் கடந்த வாரம் சிறுமி ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பில் கொள்கலன் லோரி ஓட்டுனரை தாக்கியதற்காக தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.  உள்நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய அந்த இரண்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்களில் ஒருவர் இதற்கு முன் போதைப் பொருள் குற்றத்தில் தொடர்பு இருப்பதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Cha Hoong Fong தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்கு மேலும் ஆறு சாட்சிகள் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அந்த லோரி ஓட்டுனரை தாக்கியதில் சம்பந்தப்பட்ட Muhamad Putra Abdullah என்ற 31 வயது ஆடவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!