பாசிர் மாஸ், பிப் 19 – இரு மோட்டார் சைக்கிள்களுக்கிடையே ஏற்பட்ட விபத்தையடுத்து, 9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததோடு, அவரின் வயிற்றிலிருந்த பச்சிளம் சிசு வெளியேறியது.
நேற்றிரவு 7 மணியளவில் Kelantan, Pasir Mas, Banggol Stol Repek குடியிருப்புப் பகுதியில், தனது ஆறு வயது பெண் குழந்தையுடன் Nor Haliza Abdul Yazaib ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை எதிரே வந்த மற்றொரு ஆடவனின் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதனையடுத்து, விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட அந்த ஆண் சிசு, பாசிர் மாஸ் மருத்துவமனையில் சுமார் ஐந்து மணி நேர சிகிச்சைக்குப் பிறகு இறந்ததாக உறுதிசெய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட இன்னொரு மோட்டார் சைக்கிளோட்டியும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக பாசிர் மாஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohd. Nasaruddin M. Nasir தெரிவித்தார்.