
தெமர்லோ, மே 4 – கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் தெமர்லோவுக்கு அருகே குவந்தானை நோக்கிச் செல்லும் சாலையில் 127 . 7 ஆவது கிலோமீட்டரில் திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் Hanafiah Mat விபத்துக்கு உள்ளானார். Chukai சட்டமன்ற உறுப்பினருமான Hanafiah, அவரது வாகன ஓட்டுனர் Mohd Zubaidi Zahari மற்றும் அந்த வாகனத்தில் இருந்த மேலும் இருவரும் இந்த விபத்தில் சொற்ப காயத்திற்கு உள்ளாகினர். கோலாலம்பூரிலிருந்து Kemaman னுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக Mohamad Zubaidi தெரிவித்தார். சாலையின் வலது புறத்தில் Land Rover வாகனத்தை ஓட்டிச்சென்றபோது பழங்களை ஏற்றிவந்த லோரி ஒன்று திடீரரென தங்களது தடத்தில் நுழைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தங்களது வாகனம் கவிழ்ந்ததாக Mohamad Zubaidi கூறினார்.