
கோம்பாக், செப்டம்பர் 28 – லெபோக் உத்தாமா ஸ்ரீ கோம்பாகிலிருந்து, கிரின்வூட் செல்லும் பாதையில், ஸ்ரீ கெம்பாக் தேசிய பள்ளிக்கு முன் நிகழ்ந்த சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவ்விபத்து தொடர்பில், அதிகாலை மணி 6.53 வாக்கில் தகவல் கிடைத்ததாக, கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் நோர் அர்ப்பின் முஹமட் நாசிர் தெரிவித்தார்.
எனினும், அந்த யமஹா Y15 மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பான விவரங்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை என்றாரவர்.
விபத்து காரணமாக, தலையில் பலத்த காயங்களுக்கு இலக்கான 25 வயதான மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவ்விபத்து தொடர்பில், தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக, 03-61262222 என்ற எண்களில் கோம்பாக் போலீஸ் நடவடிக்கை அறையை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.